அகாலம்

Menaka Umasiva

Pushparani Sithampari

‘ படித்தேன்.. புஷ்பராணி அக்காவின் தைரியம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. புஷ்பராஜா அவர்களுடைய புத்தகத்தை ஏழு வருடங்களுக்கு முன்னர் படித்தேன். அப்போது விடுதலைப்புலிகள் மேலிருந்த பிம்பங்கள் பல உடைந்து போயின. இன்று உங்களது புத்தகம் மூலம் இன்னும் பல விடயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. வயதில், அனுபவத்தில் மிக சிறியவள் நான். புத்தகத்தை விமர்சிக்கும் பக்குவம் எனக்கில்லை. புஷ்பராணியக்காவின் நினைவுக்குறிப்புகள் அவரது மாத்திரம் அல்ல. என்போன்றவர்களுக்கு ஒரு தகவல் களஞ்சியமும் தான். பல விடயங்களை வெளிப்படைத்தன்மையோடும் நடுநிலையோடும் எழுதியிருக்கின்றார். பல இடங்களில் அவருடைய கஸ்டங்கள் என் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. அதன் பின் அதிலிருந்து மீண்டு… தைரியமடையும் போது நானும் தைரியமடைந்தேன். அந்நினைவுகளோடு நானும் பயணம் செய்யக்கூடியதாக இருந்தது. இதை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் அக்கா.. ஒரே ஒரு விடயம் குழப்பமாக இருந்தது.. அது என் பிரச்சனை தான் .. காலவரிசைப்படி இல்லாததால் கொஞ்சம் கடினமாகவிருந்ததெனக்கு.
புஷ்பராணியக்காவினது இளமைக்காலப் புகைப்படங்களை பார்த்த போது wow அழகி என்று மனதில் சொல்லிக்கொண்டேன். அவரது மகனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான் என்று நினைக்கிறேன்.
யாழ்ப்பாணச் சாதிகள் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாமல் இருந்தது. தெரிந்து கொள்வதற்கு பெரிய ஆர்வம் காட்டியதும் கிடையாது. இப்புத்தகம் மூலம் அதையும் தெரிந்து கொண்டேன்.
ஒரு பெண்ணாக மிகப் பெருமையாக உள்ளது. மனவலிமை இன்றும் குன்றாமல் அப்படியேதான் இருக்கிறார் என்பதை சில நாட்கள் நேரில பார்த்துப்பழகியவளாக உணர்கின்றேன்.
அவர் தன் தோழியரை நினைவு கூர்ந்தது ஒரு நன்றி நவில்தலாக இருந்தது.
சிறை அனுபவங்கள், எல்லோரையும் அவரவர் இயல்பில் ஏற்று அன்பு செலுத்தும் மனது, யாரையும் முன்தீர்ப்பளிக்காமல் ஏற்றுக்கொள்ளும் நற்பண்பு மிகவும் பிடித்திருக்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக