ஓரான் பாமுக்

Kathiresan Sekar

நோபெல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் தமிழில் வெளிவந்த நூல்கள்……

Special Offer 10% Discount…..Free Delivery…..

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 8489401887.
VPP அல்லது India Post மூலம் புத்தகம் உங்கள் இல்லம் தேடி வரும்…..
Now WhatsApp No +91 8489401887..get any Tamil books..

1.என் பெயர் சிவப்பு

ஓரான் பாமுக் (ஆசிரியர்), ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.590

காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகையில் மலரை உருவாக்கும் பொறுப்பை இஸ்தான்புல்லின் நுண்ணோவியர்களிடம் ஒப்படைக்கிறார்.

2.பனி

ஓரான் பாமுக் (ஆசிரியர்), ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.500

ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் திருப்பங்களுடனும் சொல்கிறது இந்த நாவல்.

3.இஸ்தான்புல் – ஒரு நகரத்தின் நினைவுகள்

ஓரான் பாமுக் (ஆசிரியர்), ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.375

தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூறும் இந்நூல் பாமுக் தனது இளமைப் பருவத்தை திரும்பிப் பார்க்கிறார். இளமைப்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூறுகிறார். தனது நகரம் மாறியதையும் நகரத்தோடு தானும் மாறியதையும் நுட்பமாகச் செல்லிச் செல்கிறார்.

4.வெண்ணிறக் கோட்டை

ஓரான் பாமுக் (ஆசிரியர்), ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.165

ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி ‘கிழக்கிலிருந்து ஒரு புதிய நட்சத்திரத்தின் உதயம்’ என்று குறிப்பிட்டார்.

ஓரான் பாமுக்

பின்னூட்டமொன்றை இடுக