நியதியின் முன்

பேயோன் ஃப்ரான்ஸ் காஃப்கா [ஃப்ரான்ஸ் காஃப்காவின் Before the Law என்ற குட்டிக்கதையின் சொந்த மொழியாக்கம். ஜெர்மனிலிருந்து ஆங்கில மொழியாக்கம்: வில்லா முயிர், எட்வின் முயிர். எனது … மேலும்

ஹூலியோ கொர்த்தஸார் மீள்பயணத்தின் டேங்கோ

Brammarajan ஒருவர் மிக மிக மெதுவாக விஷயங்களை விவரித்துச் செல்கிறார்,  முதலில் ஃபுளோரா சொன்னதின் அடிப்படையில் அவற்றைக் கற்பனை செய்தபடி, அல்லது ஒரு கதவின் திறப்பில், அல்லது … மேலும்

மூன்று ஜெர்மானிய அதிபுனைவுகள்

மூன்று ஜெர்மானிய அதிபுனைவுகள் ஹருக்கி முராகாமி   1.பாலுறவுப் படங்களும் அதுபோன்ற குளிர்கால அருங்காட்சியகமும்.   பாலுறவு. உடலுறவு. கலவி. கூடல். இன்னும் நிறைய வார்த்தைகள் உண்டு, ஆனால் என் மனதில்நான் எண்ணிக் கொள்வது (பேசப்படும் வார்த்தை, செயல், நிகழ்வு இவற்றிலிருந்து) ஒரு குளிர்காலஅருங்காட்சியகத்தைத்தான்.   குளிர்காலத்தில் ஒரு அருங்காட்சியகம்.   ஆமாம், ‘உடலுறவிலிருந்து’ நீங்கள் ‘அருங்காட்சியகத்துக்கு’ வர நடுவில் நிறைய தொலைவைக்கடக்க வேண்டும். நீங்கள் எண்ணற்ற சுரங்கப்பாதைகளைக் கடந்து வரவேண்டும், அலுவலகக்கட்டடங்களுக்கிடையே முன்பின்னாகச் சுற்றிவர வேண்டும், ஒரு குழப்பமான ஸ்திதியைத் தாண்டிபருவகாலங்கள் பறந்து செல்ல அனுமதிக்க வேண்டும். இவையெல்லாம் ஒரு கற்றுக்குட்டிக்குத்தான்பெரும் இடையூறாகத் தோன்றும், ஒருமுறை நீங்கள் நினைவின் முழுச் சுற்றையும்முடித்துவிட்டீர்களானால், நீங்கள் உணரும் முன்பே  ‘உடலுறவில்’ இருந்து குளிர்காலஅருங்காட்சியகத்துக்கான வழியைக்  கண்டறிந்துகொள்வீர்கள்.   நான் பொய் சொல்லவில்லை. உங்களால் முடியும். நான் இன்னும் சற்று விளக்கலாம் எனநினைக்கிறேன்.   பாலுறவு நகர்ப்புற உரையாடலாக மாறுகையில், உடலுறவின் மேல் கீழான அசைவுகள் இருட்டைநிரப்புகையில், எப்போதும் போல், நான் குளிர்கால அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன்.என் தொப்பியை தொப்பிக்கான அலமாரியில் தொங்க விடுகிறேன், என் மேலங்கியை அதற்கானதண்டில் தொங்கவிடுகிறேன், என் கையுறைகளை ஒன்றன்மீது ஒன்றாக வரவேற்பு மேசையின்மூலையில் வைக்கிறேன், பிறகு, கழுத்தைச் சுற்றியிருக்கும் துணி நினைவுக்கு வர அதனை நீக்கிஎன் மேலங்கிமீது வைக்கிறேன்.   குளிர்கால அருங்காட்சியகம் ஒன்றும் மிகப்பெரியது அல்ல. அதிலுள்ளவை, அவற்றின் வகைப்பாடு,அதன் செயல்பாட்டுத் தத்துவம் யாவும் எந்த அளவுகோல்படி பார்த்தாலும் தொழில்முறைநேர்த்தியற்றவை. முதலாகப் பார்க்க அங்கு எந்த ஒருங்கிணைக்கும் கோட்பாடும் இல்லை. எகிப்தியநாய்க் கடவுளின் சிறு சிலை, மூன்றாம் நெப்போலியன் பயன்படுத்திய ஒரு பாகைமானி, சாக்கடல்குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மணி ஆகியன அங்கு இருந்தன. காட்சிக்குவைக்கப்பட்டவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்க எந்த வழியுமில்லை, அவை கூன்வளைந்து,எக்காலத்துக்கும் குளிராலும் பட்டினியாலும் பீடிக்கப்பட்ட அனாதைகளைப்போல கண்மூடி தமதுபெட்டிகளுக்குள்  கிடந்தன.   உள்ளே  அருங்காட்சியகம் மிகவும் அமைதியாய் இருந்தது. அருங்காட்சியகம் திறக்க இன்னும் சற்றுநேரமிருந்தது. என் மேசையிலிருந்து  வண்ணத்துப் பூச்சி வடிவத்திலான உலோகச்சாவியை எடுத்துநுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் தாத்தா கடிகாரத்துக்குச் சாவி கொடுக்கிறேன். முட்களைச்சரிசெய்து சரியான நேரம் வைக்கிறேன். நான்-அதாவது, நீங்கள் தவறாகப்புரிந்துகொள்ளவில்லையாயின்-இங்கு அருங்காட்சியகத்தில் வேலை செய்கிறேன்.   … மேலும்

பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

Brinthan Kanesalingam  வலைப்பூ மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி … மேலும்