கதையின்_கதை

Jawad Maraikar

30 ஆண்டுகளுக்கு முன்னர் , தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘ கலைமகள் ‘ சஞ்சிகையும் கலைமகள் வெளியீடாக வந்த நூல்களும் அன்றைய வாசகர்களால் மறக்க முடியாதவை .

அவற்றுள் , கலைமகள் வெள்ளிவிழா வெளியீடாக 1957 ஆம் ஆண்டு வந்த ” கதையின் கதை ” என்ற சிறந்த நூலைப் பற்றிச் சில குறிப்புகள்.

1942 ஆம் ஆண்டு கலைமகள் சஞ்சிகையில் புதிய பகுதியொன்றைத் தொடங்கினார் கி.வா.ஜ .

தத்தமது சிறுகதைகள் எவ்வாறு உருவாகின ? என்பதை
அப்போது சிறுகதை எழுதுவதில் சிறந்து விளங்கிய 14 எழுத்தாளர்களிடமிருந்து கட்டுரைகளாகப் பெற்று , இதழுக்கொன்றாக வெளியிட்டு வந்தார் அவர்.
கலைமகளில் அக்கட்டுரைகளைப் படிப்பதற்கு நான் பிறந்திருக்கவில்லை .

எனினும் , அக்கட்டுரைகள் ” கதையின் கதை ”
என்று நூலுருப் பெற்ற பின்னர் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இன்னும் பலருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருக்கும் .
இந்நூல் மறுபிரசுரமாக வெளியிடப்பட்டால் பலருக்குப் பயனளிக்கும்.

நூலின் உள்ளடக்கம் இது :

01. கதையின் கதை – க.நா. சுப்ரமணியன்

02. எப்படி எழுதினேன் ? – தி.ஜ.ர .

03. என் கதைகள் – ந . பிச்சமூர்த்தி

04. கதை உருவான சரித்திரம் – தி.நா. சுப்பிரமணியன்

05. என் கதைகளும் நானும் – புதுமைப் பித்தன்

06. வாழ்க்கையும் கற்பனையும் – ந. சிதம்பர
சுப்ரமணியம்

07. என் கதைகளின் வரலாறு – புரசு . பாலகிருஷ்ணன்

08. கதை மூலம் – கு.ப. ராஜகோபாலன்

09. என் கதைகள் வந்த வழி – ரா.ஸ்ரீ . தேசிகன்

10. என் கதைகளின் வரலாறு – ” கொனஷ்டை ”

11. என் கதையின் ஜோடனை – த. நா. குமாரஸ்வாமி

12. கதை வடிவான விதம் – சி. சு . செல்லப்பா

13. கதாசிரியனானேன் – பி. எம். கண்ணன்

14. கர்ணன் கலைஞன் ஆனது – கி.வா. ஜகந்நாதன்

கலைமகள்

பின்னூட்டமொன்றை இடுக