வில்லியம் பர்ரோஸின் எழுத்து

Vasu Devan

வில்லியம் பர்ரோஸின் எழுத்து, வாழ்க்கை என அனைத்தும் கலவரப்படுத்தும்..
தன் மனைவி வோல்மர் தலையில் ஆப்பிளை வைத்து குறிபார்த்து சுட்டார்…ஆப்பிள் தப்பியது..சிறைவாசம்.. விடுதலையாகி அவருடைய நண்பர் பிரையன் கைசின் உடன் இணைந்து செய்திதாள்கள் மற்றும் ஏடுகளை கத்தரித்து ஒட்டி cut and pasteஒரு புதிய உத்தியை எழுத்தில் உருவாக்கினார்..ஜாக் க்ரையக், அலென் கின்ஸ்பெர்க் உடன் இணைந்து உருவாக்கிய beat generation 1950-60 களில் ஐரோப்பா/வட அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் பரவியது..

மேற்கத்திய இலக்கிய உலகம் சதா சர்வகாலமும் ஷேக்ஸிபியரை மேற்கொள் காட்டுவதால் எரிச்சலானார். பல புதிய இலக்கிய உத்திகளுக்கு ஷேக்ஸிபியர் தடையாக இருக்கிறார் எனக் கருதி தான் இறப்பபதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் 81 வயதில் கான்ஸாஸ் பண்ணை வீட்டில் ஷேக்ஸிபியரை சுட்டுக் கொன்றதை இந்த காணொளியில் பார்க்கலாம்… (இரண்டு நிமிடங்கள்)

https://www.youtube.com/watch?v=o71Gw-rP2Tw

இதைவிட மனிதர் படு பயங்கரமான போதை பிரியர். உலகிலுள்ள அனைத்து லாகிரி போதை வஸ்துகளையும் உபயோகித்து அதன் குணாதிசியங்களை தன்னுடைய naked lunch நாவலில் விவரித்திருப்பார்.

அவர் உபயோகித்த போதை வஸ்துகள்—

Opiates, Apomorphine, Cortisone, Thorazine, Reserpine, Tolserol, Barbiturates, Chloral and paraldehyde, Benzedrine, Cocaine, Cannabis indica, Peyote, Bannisteria caapi……….

இதன் ஒவ்வொரு பண்புகளையும் விவரித்து இதன் பின்விளைவுகளயும் விவரித்துள்ளார்… குற்றவாளிகளிடமிருந்து உண்மைகளை வெளிக்கொண்ர பயன்படுத்தப்படும் தீவிர போதை வஸ்துகளும் தன்னிடம் தோற்றுள்ளது என எள்ளலாக குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய ராஜ போதை வஸ்துகளை பயன்படுத்தி தனக்கு நேர்ந்த அனுபவங்களை எழுதி பிரிட்டிஷ் மெடிக்கல் கவின்சிலுக்கு அனுப்பினார்.. Letter From A Master Addict To Dangerous Drugs என்ற தலைப்பில் விரிவான கடிதம் எழுதி மருத்துவர்களை வெலவெலக்க வைத்தார்.
கடிதத்தை வாசிக்கலாம்…

http://www.cs.cmu.edu/…/ehn/Web/release/BurroughsLetter.html

பெரும் செல்வந்தர்…ஆனால் அனைத்து சுகத்தையும் உதறி இருண்ட பிரதேசங்களுக்கு நுழைந்து அதை இலக்கியமாக ஆவணப்படுத்தினார்… இறப்பதற்கு சில காலம் முன், அவர் ஒரு நேர்காணலில் தான் உபயோகித்த போதை வஸ்துகளை விட தனக்கு பெரும் உவகை ஊட்டியதும் இந்த பிரபஞ்சத்தின் பெரிய போதை கலையும் இலக்கியமுதான் என்றார்..

பின்னூட்டமொன்றை இடுக