சுகிர்தராணி

Ilankaviarul Selvan 

சுகிர்தராணி.

சுகிர்தராணி.தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுத வந்த சுகிர்தராணி நவீன பெண்கவிஞர்களில் தவிர்க்க மு�டியாத ஆளுமை. இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
1.கைப்பற்றி என் கனவு கேள்- 2002(பூங்குயில் பதிப்பகம்)
2.இரவு மிருகம்-2004(காலச்சுவடு பதிப்பகம்)
3.அவளை மொழிபெயர்த்தல்-2006(காலச்சிவடு பதிப்பகம்)
4.தீண்டப்படாத முத்தம்-2010(காலச்சுவ�டு பதிப்பகம்)
5.காமத்திப்பூ-2012(காலச்சுவடு பதிப்பகம்)
6.இப்படிக்கு ஏவாள்- காலச்சுவடு பதிப்பகம். 2016.
தற்போது தலித் வாழ்வியல் சார்ந்த நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார்..
தன்னுடைய கவிதை நூல்களுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்..குறிப்பாக தேவமகள் கவித்தூவி விருது, பாவலர் எழுஞாயிறு விருது, புதுமைப்பித்தன் நினைவு விருது, நெய்தல் இலக்கிய அமைப்பு வழங்கும் சுந்தர ராமசாமி விருது, பெண்கள் முன்னணியின் சாதனைப் பெண் விருது போன்றவை முக்கியமானவை. அப்பாவின் ஞாபக மறதி என்னும் கவிதை ‘கண்ணாடி மீன்’ என்னும் குறும்படமாக எடுக்கப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றது… இவரது அவளை மொழிபெயர்த்தல் கவிதைத் தொகுப்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல கல்லூரிகளில் இவரது பல கவிதைகள் பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.இவரது கவிதைகள் குறித்து பல மாணவர்கள் முனைவர் பட்டம் மற்றும் இளம்முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொ�ண்டு வருகின்றனர்.
இவர் வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகிலுள்ள இலாலாப்பேட்டை என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார். காவேரிப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகின்றார்.
சாதிக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் தொடர்ந்து எழுதியும் செயல்பட்டு வருபவர்..பெண்ணியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர்..
தலித் பெண்�னிய செயல்பாடுகளில் தொடர்ந்து இயங்கி வருபவர்…பெண்களுக்கான இயங்குவெளி என்பது சமூகத்தாலும் ஆண்களாலும் வரையறுத்து வைக்கப்பட்டிருப்பதையும்,பெண் களின் உடல் என்பது ஆண்களின் அடக்குமு��றைக்கும்,பாலியல் அதிகாரத்திற்கும் களமாக இருப்பதையும் தன் படைப்புகள்மூலம் கேள்விக்குட்படுத்தி வருபவர்.பெண்கள் தம் அதிகாரத்தை வென்றெடுக்க உடலரசியலை ஒரு கூறாகப் பயன்படுத்தப்பட வேண்�டும் என்பதை உரக்கச் சொல்லி வருபவர்…உழைப்பைச் சுரண்டுதல்,பாலியல் வன்முறை, ஆண்பெண் ஏற்றத்தாழ்வுகள், பாலினச் சமத்துவமின்மை எல்லாவற்றிற்கும் களமாக விளங்கும் பெண்ணுடல் வி�டுதலை பெறாமல் பெண்வி�டுதலை சாத்தியமில்லை..பெண்விடுதலை அடையாமல் தலித்விடுதலை சாத்தியமில்லை என்பதை தன் கவிதைகளின் அடிநாதமாகக் கொண்டிருக்கும் சுகிர்தராணி, ஒரு தலித் கவிஞரும்கூட..
தான் ஒரு தலித்தாகவும் பெண்ணாகவும் இருக்கச்சொல்லி சமூகம் வற்புறுத்தியதாலேயே எழுத வந்தேன் எனக்கூறும் சுகிர்தராணியின் கவிதைகளைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்..
“பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன் இக்கவிதைகள். காதல்,காமம்,வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது ஒ�டுக்கப்பட்ட ஆண் சமயங்களில் ஈழத்தின் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் இருக்கிறது…” கவிஞர் சுகுமாரன்.
காதல் என்பது ஒரு வர்த்தகப் பெயராக, பெண் உடல் என்பது ஒரு வணிகப் பொருளாக மாற்றப்பட்டுவிட்ட சூழலில்,இச்சையின் ஆதி அர்த்தத்தை மீட்டு அதன்வழி பெண்ணின் விடுதலையைச் சாதிக்க முயல்கிறார் சுகிர்தராணி. சுகிர்தராணியின் சில கவிதைகள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஜெர்மனி நாட்டின் பண்பாட்டுத்துறை சார்பாக கடந்தவருடம் ஜெர்மனி நாட்டுக்கு அழைக்கப்பட்டு கவிதைகுறித்த கூட்டங்களிலும் கவிதை வாசிப்பிலும் கலந்து கொண்டவர். கடந்த ஜூலை மாதத்தில் வட அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளச் சென்றவர்.

 

பின்னூட்டமொன்றை இடுக