தேவையும் நுகர்வும்

Mihad Mihad
Mihad Mihad

தற்கால அனுபவங்கள் கார்ல் மார்க்சின் அணுகுமுறைகளிலிருந்து மாறுபட வேண்டிய அவசியங்களையே உணர்த்துகிறதென்பதை அறிந்த Jean Baudrillard பகிர்ந்து கொண்ட விமர்சன பூர்வ முன்வைப்புத்தான் The mirror of production. அதில் அவர் கூறுவார்

In order to achieve a radical critique of political economy, it is not enough to unmask what is hidden behind the concept of consumption the anthropology of needs and use value. We must also unmask everything hidden behind the concept of production, mode of production, productive forces, relation of production. All the fundamental concepts of Marxist analysis must be questioned starting from it’s own requirement of a radical critique and transcendence of political economy. What is axiomatic about productive forces or about the dialectical genesis of modes of production from which springs all revolutionary theory? What is axiomatic about the generic richness of man who is labour power, about the motor of history, or about history itself, which is only ” the production by ment of their material life?” The first historical act is thus the production of the means to satisfy these needs, the production of material life itself. And indeed this is a historical act, a fundamental condition of all history, which today, as thousands of years age, must daily and hourly be fulfilled merely in order to sustain human life”.

The liberation of productive forces is confused with the liberation of man : is this a revolutionary formula or that of political economy itself? Almost no one has doubted such distinguish evidence, especially not Marx for whom men ” begin to distinguish themselves from animals s soon as they begin to produce their means of subsistence. . . . .

பண்டத்தின் பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு ஆகியவை குறித்த பழைய அணுகுமுறை அப்புறப்படுத்தப்பட்டு மதிப்பு என்பது சுயாதீனமாக செயற்படும் நிலை தோன்றிவிட்டது. பொருள் மதிப்பானது குறிகள் சார்ந்ததாக உருவாக்கப் பட்டிருக்கிறது. இது பாவனை எனும் மனவெழுச்சியாக பழக்கமாகி விட்டது. இந்த நிலை உழைப்புச் சக்தி என்ற எண்ணப்பாட்டினுள்ளும் உருவாகிவிட்டது. இன்று உற்பத்திகள் மீதான இலக்குகள் அழிக்கப் பட்டு விட்டது. உற்பத்தி என்பதே ஒரு நியதியாக உருவகிக்கப்படும் நிலை தோன்றிவிட்டது.

இந்த நிலையில் பண்டங்களின் ஒருமித்த மதிப்பை சமமாக வைத்து ஒப்பிட முடியாத நிலை தோற்றுவிக்கப் படுகிறது. இனி எந்த நிலையிலும் நிர்ணயம் செய்ய முடியாத அமைப்பு பெறுமதி எனும் புதிய அந்தஸ்த்து உருவாக்கம் பெறுகிறது. இங்கு பண்டங்களின் பயன் மதிப்பும், பரிவர்த்தனை மதிப்பும் செயலற்றதாக்கப்பட்டு விட்டது. இதன் மூலம் தேவை, பயன்பாடு போன்ற அணுகுமுறைகள் வழக்கொழிக்கப்பட்டு நவநாகரிக விழுமியங்கள் முன்மொழியப் படுகின்றன.

இதனால் அபரிமிதமான உற்பத்தி நிகழும் போது புதிய மோஸ்தர்கள் குவிக்கப் படும் குப்பைக் கூடமாக மானுட வாழ்க்கை மாறுகிறது. இந்தச் சூழ்நிலையினால் கையாளப்படும் சுரண்டலுக்குள் நசுக்கப்படுகின்ற வாழ்க்கை புது விதமான பண்பாட்டுப் பாவனைகளாக நிலைபெறுகிறது. இந்த அழுத்தமான மூளைச் சலவையூடாக நாம் பண்டத்தின் பெறுமதி சார்ந்து சிந்திக்காமல் அமைப்பு சார்ந்து நுகரும் நிலைக்கு நகர்த்தப்பட்டிருக்கிறோம். இது சதாகாலத்திற்கும் சந்தையினைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வ வல்லமை எனும் ஸ்தானத்தை முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு வழங்கி விட்டது.

இன்று தேவைக்கான உற்பத்தி என்பது இல்லாமல் ஆக்கப்பட்டு நுகர வேண்டிய தேவை என்பது உருவாக்கப்பட்டு விட்டது. மேலதிக உற்பத்தியின் கட்டற்ற தன்மையானது பயன் சார்ந்து அமையாமல் நுகர்வு சார்ந்து பயமுறுத்துகிறது.

பின்னூட்டமொன்றை இடுக