Kurshith Majeed

Kurshith Majeed

 

  1. நீர் மேல் நடந்தான்
    நம்புக
    அவனுக்கு காதல் பேய் பிடித்திருக்கிறது.
  2. மின்னுயர்த்தி
    இரண்டாவது தட்டில்
    திறந்து கொண்டது
    முறைத்தபடி இறங்கிக் கொண்டன
    புதுக் கவிதையும்
    மரபுக் கவிதையும்
  3. இரண்டு இலைகளை சுருட்டி
    கூடமைத்தது கனவு.
    வேறு வழியில்லை
    இயற்கையை பாடத் தொடங்கினான் கவிஞன்.
  4. காற் சட்டையின் அடிபப் பகுதியை மடித்துக் கொண்டான்
    சுரியில் புதைந்து விடாமல்
    நீருள் மிக மெதுவாக அடி வைத்தான்
    கண்டல் தாவரத்தின் அடிப பகுதியில் மாட்டியிருந்த அவள் அன்பை
    கவனமாக பிரித்தெடுத்து
    பத்திரமாக கரை சேர்த்தான்.
  5. அவள் ஞாபகங்களை சூரணம்.செய்து
    தேனோடு குழைத்து
    இரு தேக்கரண்டி
    சாப்பாட்டிற்கு பின் அருந்தினான்
    அவன் தீரா ரோகம நீங்கி
    மனத்துள் பூக்கள் வெடித்தன.
  6. ‘அவளின்றி இனிமேவ் வராதே
    வெளியே போ…’
    பிடரியை பிடித்து
    பலங் கொண்டு தள்ளினான்
    நிலை தடுமாறி சுவரில் மோதி
    மல்லாக்க விழுந்து துடித்தது கனவு.
  7. அவன் கடலை குடித்து முடித்திருந்தான்
    அவள் பற்றிய தாகம்
    இன்னும் அடங்கியிருக்கவில்லை.
  8. அவன் திகட்ட திகட்ட
    அன்பை கொடுக்க தீர்மானித்திருந்தான்
    அவள் பாதியில் எழுந்திருக்க
    மீதி அன்பு பழுது படாதிருக்க
    அப்பிள் அடுக்குகளின் நடுவே
    குளிர் பதள பெட்டியில் வைத்தான்.
  9. புதிதாக ஏதேனுமொன்றை நிகழ்த்தும் எதிர்பார்க்கையுள்ளதால்
    இவ்விரவுள் எப்படியாவது
    கடந்து விடவேண்டும்
    இப் பெரு வலியை.
  10. இரண்டாவது கிளாசில்
    ஒரு மிடறு மிச்சமிருக்க
    வாயை புறங்கையால் இழுத்து துடைத்தான்
    வலுத்த பொரித்த மாமிசத்தை வலிந்து கடித்திழுத்தான்
    ரீவியின் சனல் மாற்றினான்
    எளியவர்களை வலியவர்கள்
    சுட்டுக் கொண்டிருந்தார்கள்.
    மிகத் தீர்க்கமாகவே முணு முணுத்தான்
    ‘இப் பூமி நிதானமற்றிருக்கிறது’.

 

பின்னூட்டமொன்றை இடுக