டெஸ்லாவும் அவரது நெட்டலையும்: (Nikola Tesla and Scalar Waves)

Ramasubramanian Subbiah

‘அறிவியல் கிறுக்கன்’ ( Mad Scientist ) என்று அழைக்கப்பட்டவர், அமெரிக்காவுக்குக் குடியேறிய செர்பிய நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் நிகோலா டெஸ்லா (Nikola Tesla).

இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் மாறுதிசை மின்தூண்டல் மோட்டாரை (AC induction Motor) உருவாக்கியவர் டெஸ்லா..

இவர் 1908-ஆம் ஆண்டு, ஜூன் 30 அன்று மாலை, அமெரிக்காவில், கொலராடோ ஸ்ப்ரிங்க்ஸ் (Colorado Springs) என்னும் இடத்தில் அமைந்திருந்த தனது சோதனைச் சாலையில் இருந்து கொண்டே, சைபீரியா-வில் பெருவெடிப்பு (Big Explosion) ஒன்றை நிகழ்த்திக் காட்டியவர். வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் உருவான மணற்குன்று இப்போதும் உள்ளது. அதற்கு அவர் தனது ‘ஹோவிட்சர்’ (howitzer) என்னும் சாதனத்திலிருந்து உருவாக்கிய ‘நெட்டலைகளைப்’ (Scalar Waves) பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்டலைகள் (Sclar Waves are longitudinal waves), ஒளியை விடவும் கூடுதல் திசைவேகத்தில் பயணிக்கக் கூடியவை. ‘நெட்டலைகளை’க் கொண்டு மின் ஆற்றலை, எந்தத் தொலைதூரத்திற்கும், மின் கம்பிகள் இல்லாமல் எடுத்துச் செல்ல முடியும் என்று டெஸ்லா அந்த நிகழ்வின் மூலம் நிரூபித்துக் காட்டினார். நெட்டலைகளைக் கொண்டு, மின்கம்பிகள் இல்லாமல், பூமியின் ஊடாகவும் மின் ஆற்றலை எடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் சொன்னார்.

டெஸ்லாதான், நட்சத்திரப் போரின் ( Star War) முன்னோடி.. எத்தனையோ நெருக்கடிகளை அமெரிக்க அரசும், அமெரிக்க இராணுவமும் அவருக்குக் கொடுத்த போதும், அவர் தனது ஆய்வு முடிவுகளைச் சொல்ல மறுத்துவிட்டார். அது மட்டும் அல்லாமல், அவர் உருவாக்கிய நெட்டலைகளைத் தோற்றுவிக்கும் ஹோவிட்சர் (howitzer) அமைப்பைப் பிரித்தும் விட்டார். அதன் காரணமாகவே டெஸ்லாவுக்குக் கிடைக்கவிருந்த நோபல் பரிசை, அமெரிக்கா தடுத்து விட்டது என்பதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

நிகோலா டெஸ்லா, நெட்டலைகளைக் கொண்டு ஆற்றலைக் கடத்தி, வெடிப்பு ஏற்படுத்திய நிகழ்வின் போது, அடர்ந்த காடுகளில், மரங்களும், செடிகொடிகளும், இப்போதைய பயிர்வட்டம் போலவே சாய்க்கப் பட்டிருந்ததைச் சிறப்பாகக் குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் பயிர்வட்டத்தின், அறிவியல் முன்னோடியாக, நிகோலா டெஸ்லாவைக் கருதலாம் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மார்ச் 2018 காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்திருக்கும், ‘பயிர்வட்டங்களும் அவற்றின் புதிர்களும்’ என்னும் எனது கட்டுரையிலிருந்து.

நன்றி காக்கைச் சிறகினிலே

பின்னூட்டமொன்றை இடுக