பிரகாசக்கவியின் கவிதை

Anwer Buhary

தோழர் லதா ராமகிருஷ்ணன் அவர்களால் ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட எனது கவிதைகள் ஒரே பார்வையில் (நன்றி தோழர் லதா ராமகிருஷ்ணன்)

1.

I

nurture delicate words

You are the masters of thick words

As, from the words your mouth spits

sometimes

dogs alight barking

and many a time

elephants arrive trumpeting

Poor me –

my ears which knew just to laugh

are now crying to death.

நான்

மெலிந்த சொற்களை வளர்ப்பவன்

நீங்கள்

தடித்த சொற்களுக்கு சொந்தக்காரர்கள்

உங்கள்

வாய் உமிழும் சொற்களில் இருந்து

சில நேரங்களில்

நாய்கள் வந்து ஊளையிட்டு

பல நேரங்களில்

யானைகள் வந்து பிளிறுவதால்

பாவம்

சிரிக்க மட்டுமே தெரிந்த எனது காதுகள்

இப்போது அழுது மாய்கின்றன

2.

BIRDS RESURRECTED BY KISSES

The love-birds that have come alive

from the lips of both my mobiles

at midnight

have sprouted into butterflies

of myriad hues.

Soaked in the shower of love

Of those fluttering their wings

With lips quivering

And honey springing,

We smelt sweet to the core.

The darling little ones, turning into the

Great Grand Love of Sea,

luscious, with biting the lips of wind

that visits the friendly flute and

sits inside its tummy,

carrying us aloft, flying high,

to the Moon

are called kisses.

முத்தங்களால் உயிர்த்தெழும் பறவைகள்

______________________________________

எமதிரு கைபேசிகளின் இதழ்களிலிருந்து

உயிர்த்தெழுந்த அன்புப் பறவைகள்

இப் பாதி ராவில்

பல வண்ணப் பட்டாம்பூச்சிகளாகின.

இதழ் துடித்து

தேன் சுரந்து சிறகசைக்கும் அவைகளின்

பாச மழையின் துகிலுடலில்

கஸ்தூரியாய் கமகமத்தோம் நாங்கள்.

ஸ்னேக புல்லாங்குழலின்

வயிற்றுக்குள் வந்தமரும்

காற்றின் இதழ் கடித்து

காமுறும் கடலின் பேரின்ப காதலாகி

நிலவுக்கு எங்களை தூக்கிப் பறக்கும்

செல்லக்குட்டிகளுக்கு முத்தமென்று பெயர்

3.

COME RUNNING BEHIND THIS DREAM

COME RUNNING BEHIND THIS DREAM

I have kept hidden there

a tree where love grows

Stealing my sheets where I have buried

the secret of the Tree’s growth

There the poem is flying away

I am not upset

I have one love

and a few kisses in my possession

I would plant a lot of trees

yet again

If you too have Love

bring it and pour it here

Tomorrow I will come running behind your dream.

இந்த கனவின் பின்னே நீங்கள் ஓடிவாருங்கள்

__________________________________________

அன்பு காய்க்கும் ஒரு மரத்தை நான்

அங்கு ஒழித்து வைத்திருக்கின்றேன்

மரம் முளைத்த கதையின் ரகசியங்களை

புதைத்து வைத்திருந்த

எனது காகிதங்களை திருடிக்கொண்டு

அதோ அந்தக்கவிதை பறந்து போகின்றது

அதனால் எனக்கு கவலை ஒன்றுமில்லை

என்னிடம் ஒரு காதலும்

சில முத்தங்களும் இருக்கின்றன

மீண்டும் நான்

பல மரங்களை நட்டுவிடுவேன்

உங்களிடமும் அன்பிருந்தால்

கொண்டுவந்திங்கு

ஊற்றிவிட்டு போங்கள்

நாளை உங்கள் கனவின் பின்னால் நான் ஓடிவருவேன்

4.

FROM HER SORROW-FILLED DIARY NOTES

He who is a prisoner of circumstances

gave her as like the plastic egg of Chinese

many a poisonous moments as gifts

and boarded a plane and flew off.

Each of those moments

turned into many an era

and stung her, causing anguish unbearable.

She incubated them all as eggs.

Out of them

two chickens called minutes and hours came out.

In order to hasten the growth of those chickens

she named them broiler chicken

Days turned into weeks;

Weeks became months;

And two years have thus gone.

There, she waits there for his arrival

What more to say

From the moment they see him

the chickens that she has hatched

would henceforth be filled with joy unmatched.

துயர் கவியும் அவளது டயரிக் குறிப்பிலிருந்து

_________________________________________

சூழ்நிலை கைதியாகிய அவன் அவளுக்கு

சைனாக்காரனின் பிளாஸ்டிக் முடடையைப்போல

விஷமாகிய பல வினாடிகளை பரிசளித்துவிட்டு

விமானம் ஏறி பறந்துபோனான்

அந்த வினாடிகள் ஒவ்வொன்ரும்

பல யுகங்களென மாறி அவளை கொத்திக் கொன்றன

அவற்றையெல்லாம் அவள்

கோழி முட்டைகளைப்போல அடைகாத்தால்

அவற்றிலிருந்து நிமிடங்கள் மணித்தியாலங்கள் என்னும்

இருவகை கோழிக் குஞ்சுகள் வெளியேறின

அவள் அந்த குஞ்சுகளின்

வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்துவதற்காக

அவற்றுக்கு புரைலர் கோழியென பெயரிட்டாள்

நாட்கள்

வாரங்களாகின

மாதங்களாகின

வருடங்கள் இரண்டாகவும் ஆகின

அதோ அவன் வரும் வழி பார்த்து

காத்துக்கிடக்கின்றாள் அவள்

இன்னுமென்ன

அவனை கண்டவுடன்

அவள் வளர்த்த கோழிக் குஞ்சுகளுக்கெல்லாம்

கொண்டாட்டம் கும்மாளம்தான் இனி

5.

SO, LET’S LOVE WATER

My father’s father had Rain.

He reared it like a puppy.

My father had a sea.

Its name was kitten.

It went round and round his leg.

If mother prepared ‘Puliyaanam’

It tasted delicious like river.

I sank in it and bathed.

That place called itself pond.

To learn swimming

my friend went to the lake.

My wife like waterfalls.

Just yesterday have I gifted a well

to my children.

Today it is lost to them.

The Sun, coming to me,

telling me repeatedly

the nightmare of my grandchildren

going as far as the space tomorrow

for a mouthful of water

with tears weighing heavy on them,

began to weep today.

So, let’s love Water.

__________________________________

எனது அப்பாவின் அப்பாவிடம்

மழை இருந்தது

அதையவர்

நாய்க்குட்டி போல வளர்த்து வந்தார்

அப்பாவிடம்

ஒரு கடல் இருந்தது

அதற்கு பூனைக்குட்டி யென்று பெயர்

அவர் காலையது சுற்றிச் சுற்றி வந்தது

அம்மா புளியாணம் காய்ச்சினால்

அது ஆறு போலது ருசித்தது

நான் முங்கிக் குளித்தேன்

அந்த இடம் தன்னை குளம் என்றது

நண்பன் நீச்சல் பழக

ஏரிக்குப் போனான்

என் மனைவிக்கு

நீர்வீழ்ச்சி பிடித்திருந்தது

நேற்று நான் எனது பிள்ளைகளுக்கு

கிணறொன்றை பரிசளித்தேன்

இன்றது அவர்களிடம்

இல்லாமல் போயிருந்தது

நாளை என் பேரப்பிள்ளைகள்

ஒரு மிடர் தண்ணீருக்காக கண்ணீர் சுமந்து

விண்வெளி செல்லும் ஒரு கெட்டகனவை

சூரியன் வந்தென்னிடம் சொல்லிச் சொல்லி

அழத்தொடங்கியது இன்று

ஆதலால் நாம் தண்ணீரை காதலிப்போம்

6.

In the cage where human crowd

turned corrupt

holds its head high

humaneness has turned into nought

O Maayaa

Let us leave the land

and take shelter in jungle

Come flying O Maayaa

Lion Tiger Cheetah bear

won’t harm you in any way Maayaa

Except man

all other species on this earth

are endowed with humaneness Maayaa

Our jungle of love

so lovely Maayaa

Sitting there

eating apple

let us relish the grand tale

of Adam and Eve plucking the Moon

Come running O Maayaa.

Let’s dance and enjoy the beauty unparalleled of

elephants

producing the music of saxophone

so exquisitely clear and loud

in the royal court of the animals

Come singing O Maayaa.

மாசுபட்ட

மனிதர் கூட்டம்

மார்தட்டி

வாழும் கூண்டில்

மனிதாபிமானமென்பது இப்போது

கிலோ என்ன விலையென்று

ஆகிப்போச்சு மாயா

நாம்

நாடுவிட்டு

காடுபுகுவோம்

நீ பறந்துவா மாயா

சிங்கம் புலி

சிறுத்தை கரடி

இவையெல்லாம்

உன்னையொன்றும்

செய்யாது மாயா

மனிதனைத்தவிர

உலகில்

மற்றெல்லாவற்றுக்கும்

மனிதாபிமானமுண்டு மாயா

நம்

காதல் காடு

அழகானது மாயா

அதில் அமர்ந்திருந்து

ஆதாமும் ஏவாளும்

நிலாப்பரித்த

அந்தப் பெருங்கதையை

ஆப்பிள் உண்டு

நாம் ருசிப்போம்

நீ ஓடிவா மாயா

மிருகங்களின் தர்பாரில்

ஓங்கி ஒலிக்கும்

சாக்ஸபோன் இசையை

அற்புதமாய் வாசிக்கும்

யானைகளின் பேரழகை நாம்

ஆடி ரசிப்போம்

நீ பாடிவா மாயா

7.

With the help of incessantly showering love

he sold a day

and built a night.

When she abducted sleep from night

and strangled it

throbbing

the night turned beautiful.

Plucking the stars

he stuck her ripe lips there.

She washed the wind

and fixed the moon.

The eyelids of the cabin

with light everywhere, closed.

தொடர்ச்சியாக பெய்யும்

காதலினால்

அவன்

பகலை விற்று

ஒரு இரவை கட்டினான்.

இரவிலிருந்து

தூக்கத்தை கடத்திச்சென்று

அவள்

தூக்கிலிட்டதும்

துடிதுடித்து

இரவு அழகானது.

நட்ச்சத்திரங்களை

பிடிங்கி

அவளது கனிந்த உதடுகளை

அங்கு பதித்தான்

அவள் காற்றை கழுவி

நிலவைப்பொருத்தினாள்

ஒளி படர்ந்த அறையின்

இமை மூடிக்கொண்டது.

_ பிரகாசக்கவி

பிரகாசக்கவி

பின்னூட்டமொன்றை இடுக