நானும் நண்டும் ஒரு தேர்தலும்

Mohamed Atheek – Solaikili

மணல்கள் எழுந்து கையடித்தன
அலை பூமாலை போட்டது 
எந்த வேட்பாளனுக்கு என்பதுதான்
எனக்குத் தெரியவில்லை
காரணம்
பார்வைக்குத் தெரியாத வேட்பாளர்கள் எல்லாம்
போட்டியிடும் ஒரு தேசம்
இது

நான் கடற்கரையில் இனி இருக்க முடியாது
வேறு எங்காவது ஒரு கிடங்கிற்குள் விழுந்து
மாய வேண்டும்
ஊருக்குள் அடிக்கின்ற
தேர்தல் நாற்றம்
பொறுக்க முடியாது வந்தேன்
என் மூக்கை
இந்தக் கடற்கரைக் காற்றில் கழுகிச் சுத்தமாக்க

கெடுத்தான்
யாரோ ஒரு கண்ணுக்குத் தெரியாத
வேட்பாளன் இங்கும்
திடீரென வந்தருளி
நண்டும் தேடுகிறது அவனை
மீன் நெஞ்சு மணத்த கடற்கரைக் காற்றைக்
கெடுத்த அவன்
அதன் கண்ணுக்கும் தெரியவில்லை
கலங்கியேனும்

அது
படித்த நண்டு
தன் வாழ்க்கை முழுக்க தனது முழுப்பெயரை
சிறு பிசகும் இல்லாமல்
எழுதி எழுதி இந்தக் கடற்கரை மணலில்
திருத்தித் தெளிந்தது
இம்முறையும் எம் மண்ணில் தேர்தலிலே நிற்கின்ற
வேட்பாளர் போலல்ல
அது
கனமும் காத்திரமும் உள்ளது
நண்டு என்ற மூன்றெழுத்தை
இன்னும் நினைவுவைத்து எழுதிக்கொண்டே இருப்பது

08.02.1994-( பாம்பு நரப்பு மனிதன் )

பாம்பு நரம்பு மனிதன்

பின்னூட்டமொன்றை இடுக