உயரமும் உம்பரும் : இலக்குவனார் திருவள்ளுவன்

http://www.akaramuthala.in/sangailakkiyam/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE/

உயரமும் உம்பரும்

height-உயரம் என வேளாணியல், பொறி-நுட்பவியல், கணக்கியலில் பயன்படுத்து கின்றனர். ஆனால், elevation-உயரம் எனவேளாணியல், புவியியல், மனை அறிவியல், மருத்துவயியல் ஆகியவற்றில் பயன்படுத்துகின்றனர்.

அதேநேரம், உயிரியல், பொறி- நுட்பவியல், கணக்கியல், கால்நடை அறிவியல் ஆகியவற்றில் ஏற்றம் எனப் பயன்படுத்துகின்றனர்.

ஆட்சியியலில் உயர்வு, உயர்த்துதல், ஏற்றம் எனவும் வேறு பொருளில் கையாளப்படும் பொழுது முன்புறத் தோற்றம், மேடு எனவும் பயன்படுத்துகின்றனர். எனவே இரண்டையும் வேறுபடுத்திக் குறிப்பிடவெண்டும்.

சங்க இலக்கியங்களில் உம்பர், உவணம் என்னும் சொற்கள் உயரத்தைக் குறிக்கின்றன. உம்பர் வரும் சில இடங்கள் வருமாறு:

பன்மலர்க்கான்யாற்றுஉம்பர்க்கருங்கலை (நற்றிணை : 119.6)

ஈனும்உம்பரும்பெறல்அருங்குஉரைத்தே (ஐங்குறுநூறு : 401.5)

உம்பர்உறையும்ஔிகிளர்வான்ஊர்பாடும் (பரிபாடல்: 11.70)

இமையத்துஉம்பரும்விளங்குக! (கலித்தொகை : 105.75)

உம்பர் என்பது உயர்ச்சியைக் குறிக்கிறது. எனினும் சில இடங்களில் ஓரிடத்திற்கு அப்பால் உள்ள தொலைவு அல்லது உயரத்தைக் குறிக்கிறது.

உயரம் – height

உம்பர் – elevation, elevated spot

 

 

பின்னூட்டமொன்றை இடுக